CCSE-IV 2018 Exam Cut-off

இவ்வருட குருப் நான்கு (CCSE-IV 2018) தேர்வை ஆராய்ந்ததில்

1. பத்தாம் வகுப்பு தர தேர்வு என்றாலும் கேள்வித்தாளை பார்த்தால் யு.பி.எஸ்.சி யின் CDS/NDA போன்ற தேர்வுகளின் தரம் போல் தான் இருக்கிறது

2. மொழிப்பாடத்தில் ஒருவர்  100/100 ஏ எடுக்கிறார் என்றே வைத்துக் கொண்டாலும் பொது அறிவில் 70 க்கு மேல் தாண்டணும்னா  பழனிக்கு காவடி எடுத்து இருக்கணும்
3. நடப்பு நிகழ்வுகள் பெரும்பாலும் அக்டோபர்/நவம்பர்/டிசம்பர் 2017 ல் இருந்து தான் அதிகம் கேட்கபட்டுள்ளது.. ஆங்கில மாத இதழ்களில் அனைத்தும் இருக்கிறது... படித்தவர்கள் சரியாக பதில் அளித்து இருக்க வாய்ப்புள்ளது...

4. அறிவியல் பகுதியில் வேதியியலுக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும் சற்று யோசித்து பதில் அளிக்கும் படியான கேள்விகளே இருந்தது.. மொத்தம் அறிவியலில் மட்டுமே 14 கேள்விகள் …

5. அரசியல் அறிவியல் கேள்விகளை ஏதோ ருச்சி ஊறுகாய் போன்று பயன்படுத்தி உள்ளனர். நேரடி கேள்விகளே

6.  வரலாறு கேள்விகளுக்கு வரலாறே எழுதலாம் போல.. ஏதோ NET எக்ஸாம் கேள்விகள் மாதிரி இருக்கு... எனவே இதுலயும் கைவரிசை காட்டி உள்ளனர்.. சமச்சீர் புத்தகம் லாம் ஒரு பொருட்டாவே மதிக்கல இவனுங்க... 

7. பொருளாதார கேள்விகள் எளிமை.. திட்டங்கள்.. பொருத்துக போன்ற கேள்விகள் தேர்வின் போது மரண பீதியின் இடையே சற்று குளுகோஸ் ஏற்றி இருக்க வேண்டும்

8. கணக்கு... ரொம்ப ஆழமான சில கேள்விகள்... எவனோ அல்ஜீப்ரா படிச்சவன் போல.. அதுலயே மனுஷன் மூழ்கிட்டான்..... பின்னம் சின்னம் ன்னு சின்னா பின்னம் ஆக்கி இருக்கானுங்க
9. புவியியல் பகுதில இருந்து மொத்தமே 5 கேள்விகள் தான்... கல்யாண வீட்ல கொஞ்சோண்டு மிளகா வத்தல் மாறி வைக்கிற மாறி இருக்கு

10. மொத்தத்துல இன்றய தேர்வு பத்தி சொல்லனும்னா .... பொது அறிவு கடினம் .. மாற்று கருத்து இல்லை.. மொழிப்பகுதி  90 வரை எடுப்பது எளிது.. அதற்கு மேல் எடுக்க கடினமாக உழைத்து இருக்க வேண்டும் ....

என்னோடைய Prediction 95+65 = 160 ..

155 + என்பது பாதுகாப்பு பகுதி ... 160 க்கு மேல் எடுத்தால் கண்டிப்பாக அடிச்சான் பாரு Appointment Order ன்னு எதிர்பாக்கிற வேலைய பாக்கலாம்...

மத்தவங்க... இந்த தடவ வெறும் குண்டு ஆயி போச்சு... அடுத்த operation ????? புது குண்டு தயாரிக்க ஆரம்பிங்க பாஸ்......

குறிப்பு : இந்த பதிவ பகிருங்க.. தப்பு இல்ல... ஆனா வேற யாரோட பேரையோ போட்டு எனக்கே வாட்ஸ் அப்ல வருது... அதான் கொஞ்சம் லைட்டா....

அன்புடன்

வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி
திருநெல்வேலி

No comments: