1. கண்டிப்பாக
நேற்று இரவு ஒரு கலங்கிய தூக்கத்துடன் தான் சென்று இருக்க வேண்டும்.. காலை
எந்திக்கும் வரை சாதாரண இரவு போல தான் இருக்கும்..விழித்தவுடன் எதிர்காலம்
பற்றிய பயம் உடனே உங்கள் குரல்வளையை கவ்வி இருக்க வேண்டும் ..
2.
எந்த பக்கம் திரும்புனாலும் குருப் நான்கு தேர்வு பற்றிய பேச்சு தான்
இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு இருக்கும்.. எல்லா பக்கமும் அணை கட்டுவாங்க..
உறுதியா வராது ன்னு தெரிஞ்சவங்க அடுத்த கட்ட வேலையை பாருங்க.. நீங்க அவுட்
ஆய்டீங்க... மதில் மேல் பூனை உள்ளவர்கள் 3rd அம்பயர் முடிவுக்காக
நில்லுங்க... வெற்றிக்காக காத்து இருப்பவர்கள் மட்டும் மைதானம் உள்ள
நில்லுங்க
3. நீங்க எக்ஸாம்
நல்லாவே பண்ணி இருந்தாலும் சொதப்பிட்டோமே ன்னு தான் தோணும்... அது
இயல்பு... கொஞ்சம் பொறுங்க... அதிகாரபூர்வ விடை வெளியிடும்வரை...
4. அவுட் ஆனவர்கள் இதுக்கு மேல என்ன சார் இருக்கு.. அவ்ளோதான் பக்கோடா விக்க போலாமான்னு யோசிக்காதீங்க.. அடுத்து குருப் இரண்டு தேர்வு வருகிறது..அதுவும் இல்லாம முன் எப்போதும் இல்லாம சொன்ன தேதிக்கு வேற டிங் டாங் ன்னு அறிவிக்கை வந்துட்டே இருக்கு.. போய் படிங்க.. இன்னும் கொலை பசியோடு
5. ஒரு ஒரு வாரம் காடு மலைன்னு சுத்துங்க.. மனச அது ரொம்ப இலகுவாக்கும்...மனச பழைய நிலைமைக்கு கொண்டு வரும்... அது போக வழி இல்லன்னா தன்னம்பிக்கை புத்தகங்கள் படிங்க....
6. 189/200, 175/200,200/200 ன்னு சில செண்டம் பரிதாபங்கள் வாட்ஸ் அப்லையும் முகநூல்லையும் போடுவாங்க..கண்டுக்கவே கண்டுக்காதீங்க... எல்லாம் ஒரு விளம்பரம் தான் ன்னு கெக்க புக்க ன்னு உள்ள சிரிச்சுக்கோங்க... இந்த வினாத்தாள்ள யாரோ ஒருவர் இப்படி எடுக்கலாம்.. எல்லாரும் இப்டி எடுக்க வாய்ப்பே இல்ல..
7. ஏண்டா மவனே என்னடா இவ்ளோ நாள் படிச்சன்னு சில உறவினர்கள் வந்த உரசி பாப்பாங்க... அடி நமக்கு மட்டும் தான் தெரியும் (என்னா அடி)...பாஸ் பன்னிருவியா ன்னு அவங்க உரசி பாக்கும் போது ஆமா ஆமா ன்னு சொல்லி தீய வச்சி உட்டுருங்க.... கருகட்டும்..
8. டி என் பி எஸ் சி தேர்வு ஒவ்வொரு தேர்விலும் அமீபா மாறி வடிவத்தை மாற்றிகிட்டே இருக்காங்க.. அதனால இதுதான் pattern ன்னு கணிச்சு படிக்காதீங்க... அடுத்த எக்ஸாம் க்கு
எந்த பால போட்டாலும் சிக்ஸ் அடிக்கிற மாறி படிக்கணும்
9. உள்ளுக்குள்ள பாதி உயிர் தான் இப்ப இருக்கும்.. மீதி உயிர் வரணும்னா திரும்ப வெறி கொண்டு படிங்க.. ரத்த செல்கள், செல் சுவர், மைட்டோகாண்டிரியா, நுயிக்ளியஸ் , டி என் ஏ , ஜீன் வரைக்கும் அடுத்த எக்ஸாம்ல வெற்றி பெறனும்னு இப்பவே கோடிங் பண்ணி வைங்க....அப்பத்தான் ஒரு வெறி வரும்
10. இறுதியாக .. நேற்றைய அனுபவம் என்பது ஒரு உரம்.. நாளைய கனவு என்பது விதை... ரெண்டையும் மிக்ஸ் பண்ணாதான் விதை விருட்சமாக மாறும்... மனசுல வச்சுக்கோங்க ..

அன்புடன்
*வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்*
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி
திருநெல்வேலி
*வெ.சிவ ஆனந்த கிருஷ்ணன்*
ஒலிபரப்பு பொறுப்பாளர்
அகில இந்திய வானொலி
திருநெல்வேலி
No comments:
Post a Comment