சாதனை ஸ்வப்னா

போட்டித் தேர்வினைப் பொறுத்த வரையில், ஏற்கனவே உள்ள பாதையில் செல்லவே பல பேர் தடுமாறிக் கொண்டிருக்க,

பல்வேறு சட்டப் போராட்டங்களின் மூலம் புதிதாக ஒரு பாதை அமைத்து,

தன்னைச் சார்ந்த மற்றவர்களுக்கும் வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ள தங்கை ஸ்வப்னா.

ஏற்கனவே உள்ள பாதையில் செல்பவர்கள் வெற்றியாளர்கள்!

புதிய பாதையை உருவாக்குபவர்கள் சாதனையாளர்கள்!

அந்த வகையில், தடைகளைத் தாண்டி முயல்வதில் "தனி ஒருவள்" இவள்.

இன்று இந்தியாவின் முதல் திருநங்கை மாநில பதிவுத்துறை உதவியாளர் (Group 2A Grade Sub Registrar)

மற்றும்

அரசிதழ் பதிவுறா அலுவலராக பணியில் சேர்ந்த முதல் திருநங்கை.

"வாழ்த்துக்கள்" என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது.

ஏனெனில் குவிந்து வரும் வாழ்த்துக்களை விட இவள் சந்தித்த வலிகள் அதிகம்.

வெற்றிகள் தொடரட்டும்.
(படத்தில் என் மகனுடன் , மதுரை காந்தி மியூசியத்தில் 6 மாதங்களுக்கு முன்பு சந்தித்த போது)

அன்புள்ள
அஜி, சென்னை

No comments: