ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா விருது 2017


சனி, 28 ஜன 2017

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதேநாளில், ஆஸ்திரேலியா நாடும் குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் குடியரசு தினக் கொண்டாட்டத்தை தொடர்ந்து, இந்தியாவைச் சேர்ந்த கீழ்க்கண்ட நபர்களுக்கு ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற விருதுப் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சிறந்த முறையில் சமூகத் தொண்டு ஆற்றியவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படுவது வழக்கம்.

01) புருசோத்தம் சாவ்ரிகர் (மருத்துவத் துறையில் சிறப்பான சேவை ஆற்றியதற்காக ) இவர் ஆகாசவானி சிட்னி’ என்ற பெயரில் சமூக ரேடியோ பண்பலை ஒன்றையும் உருவாக்கி நடத்தி வருகிறார்

02) மகான் சிங் காங்குரே (நரம்பியல் கதிர்வீச்சு, கல்வித்துறை மற்றும் மருத்துவம்சார்ந்த பிற துறைகளில் சிறப்பாக சேவை ஆற்றியதற்காக )

03) விஜயகுமார் ( அணு மருத்துவ நிபுணர், சிட்னி நகர தமிழ்ச் சங்கத் தலைவர் )

04) ரஞ்சனா ஸ்ரீவத்சா ( மருத்துவ துறை )
வடக்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் நகரில் பசியால் வாடும் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இலவச உணவு அளித்துவரும் " தேஜிந்தர் பால் சிங் " என்பவருக்கு டார்வின் நகர ‘ லோக்கல் ஹீரோ ’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நான்காவது ஆண்டாக இந்த விருதைப் பெறுகின்றார்.
 

No comments: