1947 இல் தஞ்சாவூரில் பிறந்தவர். நடிகரான அவரது தாத்தா ஆர். பாலசுப்பிரமணியத்தின் தூண்டுதலால் இவர் எழுத்தாளரானார்.
ஒரு ஓவியக் கலைஞராகத் தனது பணியைத் தொடங்கிய அனுராதா தொடக்கத்தில்
முக்கியமான இதழ்களில் வேலைதேடி முயற்சித்தார். ஆனால் அவரது முயற்சிகள்
பலனளிக்கவில்லை. பின் ’மங்கை’ இதழாசிரியர் அனுராதாவின் படைப்புகள் நன்றாக
இருப்பதை அறிந்து அவரைப் பணியில் சேர்த்துக் கொண்டார். 1977 இல் மங்கை இதழ்
மூலமாக தனது எழுத்துலகப் பணியைத் தொடங்கினார் அனுராதா.