70-வது சுதந்திர தின தமிழக அரசு விருதுகள்

Aug 15 2016 on 12:09 PM

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, விருதுகளை வழங்குகினார்.
அப்துல்கலாம் விருது :  சென்னை தோல் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி சண்முகம் பெற்றார்.

கல்பனா சாவ்லா விருது : நாமக்கல்லை சேர்ந்த ஜெயந்தி 

மாற்றுத்திறனாளி நலனில் சிறந்த மருத்துவ சேவையாற்றிய டாக்டர் ராஜாகண்ணன் 

சிறந்த சமூக பணியாளர் : முகம்மது ரபீ

# முக்கண் புராணங்கள்


சிவனின் முக்கண்கள்

சைவ சமயம் சார்ந்த தமிழ் புராணங்கள் பல இருந்தாலும் மூன்று நூல்களை மட்டும் தனித்துக்காட்ட சிவனின் மூன்று கண்களோடு ஒப்பிட்டுக் கூறுவர். அவை பெரியபுராணம், திருவிளையாடல் புராணம் மற்றும் கந்த புராணம் ஆகும்.

கண் புராணம் ஆசிரியர்
வலக்கண் பெரிய புராணம் சேக்கிழார்
இடக்கண் திருவிளையாடல் புராணம் பரஞ்சோதி முனிவர்
நெற்றிக்கண் கந்தபுராணம் கச்சியப்ப சிவாச்சாரியார்

# நாலாயிர திவ்விய பிரபந்தம்

நாலாயிர திவ்விய பிரபந்தம் பெருமாளை குறித்து பாடப்பட்ட பக்தி பாடல் தொகுப்பாகும். இது இந்து மதத்தில் வைணவ சமயத்தின் ஓர் ஆதாரமாக, தமிழ்மறையாக கொண்டாடப்படுகிறது.
கி.பி. 6ஆம் நூற்றாண்டு முதல் 9 ஆம் நூற்றாண்டுக்குள் வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் 12 பேரினால் இயற்றப்பட்ட இந்த பாடல்களை, 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நாதமுனிகள் என்பார் ஆழ்வார்கள் அருளிச் செயல்கள் எனத் தொகுத்தார். பின்னர் வந்த மணவாளமாமுனிகள், நாதமுனிகள் தொகுத்த ஆழ்வார்களின் பிரபந்தத்தோடு, திருவரங்கத்தமுதனார் செய்த இராமானுச நூற்றந்தாதியும் சேர்த்து நாலாயிர திவ்வியப் பிரபந்தம் என அழைக்கும்படி அருளினார்.